மெல்போர்ன் : தென்னை மரத்தில் தேள்கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும் என்ற வாக்கு கேலிக்காக கூறப்படுவதுண்டு. ஆனால் இந்த வாக்கு தற்போது பருவமாற்றத்தையொட்டி உண்மையாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீக்கு
இதுவரை மூவர் பலியான நிலையில், இந்த காட்டுத்தீக்கு இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தாமதமான காட்டுத்தீ காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டிய குளிர்ந்த காற்று தடைபட்டதாகவும், அதனால் வெப்பம் அதிகரித்து இந்த அதிபயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் மெல்போர்ன் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோடை வெப்பம் நீடித்ததே காரணம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் உள்ள காடுகளில் அதிபயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் எட்டரை லட்சம் ஹெக்டேர் அளவிலான பகுதிகள் தீயில் பற்றி எரிகின்றன. இந்தக் காட்டுத்தீயில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.