விசாரணையில் அவர்கள் தங்கத்தை கடத்திவந்ததையும் அதிகாரிகளைப் பார்த்ததும் தங்கத்தை கடலுக்குள் போட்டுவிட்டதையும் தெரிவித்தனர்

ஆனால், அவர்களிடம் தங்கம் ஏதும் இல்லாத நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் தங்கத்தை கடத்திவந்ததையும் அதிகாரிகளைப் பார்த்ததும் தங்கத்தை கடலுக்குள் போட்டுவிட்டதையும் தெரிவித்தனர். ஆனால், அப்போது மாலை வேளை ஆகிவிட்டதால் விசாரணை தொடரவில்லை.


இதற்குப் பிறகு மார்ச் 4ஆம் தேதியன்று காலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் உதவியுடன் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் கடலடியில் போடப்பட்ட தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.


இந்த நடவடிக்கையில் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட, பார் வடிவிலான, 14.568 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 6,30,21,168 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட முஹம்மது ஃபரூக், முஹம்மது ஆசிக் ஆகிய இருவருமே ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.