எங்கிருக்கிறார் நித்யானந்தா? ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, தற்போது எங்கிருக்கிறார் என்பது பற்றி ஈக்வடார் தூதர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளா


அந்த தீவிற்கு “கைலாசா” என்று பெயரில் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில், நித்தியானந்தா அமர்ந்திருப்பது போல் தனிக்கொடி, தேசியப் பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம் என ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் பதிவிட்டுள்ளனர்.

இந்த தீவில் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக இரண்டு கலரில் பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு அதற்கான தகுதியும் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருக்கும் ஈக்வடார் தூதர் ஜெய்மி மார்சன் ரோமெரோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சுற்றுலா பயணியாக ஈக்வடார் நாட்டிற்கு நித்யானந்தா வந்தார். அங்கிருந்த படியே தனக்கு ”சர்வதேச புரடக்‌ஷன் ஸ்டேட்டஸ்” வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.