அமெரிக்காவில் நீச்சல் உடையில் வந்த உலக அழகி ஒருவர் மேடையிலேயே வழுக்கி விழுந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் 2019ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி நடந்தது. இந்த போட்டியின் ஒரு பாகமாக நீச்சல் உடையில் அழகிகள் ஒருவர் பின் ஒருவராக நடந்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு "நேற்றைய இரவு எனக்கு மிகவும் மோசமான சம்பவம் நடந்துவிட்டது. மேடையிலேயே வழுக்கி விழுந்துவிட்டேன். இதுவரை அப்படி நடந்ததேயில்லை. ஒவ்வொரு சம்பவத்திலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். இதன் மூலம் நான் ஒரு பெண் வாழ்வில் எவ்வளவு வழுக்கி விழுந்தாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.