இந்தப் பக்கம் வராதீங்க... ஜேஎன்யு மாணவர்களை வெளுத்துக் கட்டிய டெல்லி போலீஸ்!!

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் தடியடி நடத்தியதால், டெல்லியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது,


குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கல்விக் கட்டணம், விடுதி கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில், கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸார் தடியடி நடத்தியதையடுத்து, போராட்டம் வன்முறையாக வெடித்தது.

மாணவர்களின் போராட்டம் வலுத்ததையடுத்து "கல்விக் கட்டண உயர்வை குறைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்" என பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிமொழி அளித்தது.