சிபியின் வால்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளன.
யு. அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் ‘வால்டர்'. சிபி சத்யராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படம் ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் கதையாகும். இப்படத்தை 11:11 ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ஷ்ருதி திலக் தயாரிக்கிறார்.
இப்படத்தில் நட்டி நடராஜன் மற்றும் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ஷிரின் கன்ச்வாலா, சனம் ஷெட்டி, பாவா செல்லதுரை, அபிஷேக் வினோத் மற்றும் சார்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ராசமதி ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். மேலும், விக்கி இப்படத்தின் சண்டைக் காட்சிகளை இயக்க, தர்ம பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘யாரைத் தேதி நெஞ்சமே' சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், நேற்று இப்படத்தின் ஆடியோ லான்ச் விழா நடிபெற்றது. அதில், இயக்குனர் மிஷ்கின், பி. வாசு, நட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்படத்தின் பாடல்களை ஓய்வுபெற்ற முன்னாள் DGP Walter Dawaram IPS வெளியிட, அதனை இயக்குனர் பி. வாசு பெற்றுக்கொண்டார். தற்போது இந்த பாடல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.